நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்

Friday, February 5, 2010



எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.

வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.

நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின் பெயர்களாக இருந்தன.

பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.

எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.

அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.

(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.

(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.

(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.

(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.

(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.

பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.

தமிழ் வடமொழி
கருங்குழலி கிருஸ்ணவேணி
காரரசி கிருஸ்ணராணி
காரரசன் கிருஸ்ணராசா
பொன்னடியான் கனகதாஸ்

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.

ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,

ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.

பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.


CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.

TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.

LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்

DR. LE. DE. FOREST - (FOREST - காடு)
FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923

ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.

COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.

ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.

GARY BECKER - (BECK - மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.

SIR RICHARD STONE - (STONE - கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.

FREDERICK NORTH - (NORTH - வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.

SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820

STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.)

(COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.

DR. LIAM FOX - (FOX - நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.

மேலும் சில பெயர்கள் :-
ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER

பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.

சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.

முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.

பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.

மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46இ000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21இ000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.

தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.


இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.

- தமிழ் வளர்ச்சிக் கழகம் -[23 - 06 - 1997]

காப்புரிமை தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்குரியது

தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர்

தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர்

[அ(1,2)] [] [] [] [] [] [] [] [] [] []
[] [கா] [கி] [கு] [கூ] [கே] [கை] [கொ] [கோ]
[] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சொ] [சோ]
[ஞா] [] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[] [நா] [நி] [நீ] [நு] [நெ] [நே] [நொ]
[] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]
[யா] [] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]

தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்

தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்

[ ][] [] [] [] [] [] [] [] [] [ ]
[] [கா] [கி] [கீ] [கு] [கூ] [கெ] [கே] [கை] [கொ] [கோ]
[] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சை] [சொ] [சோ]
[ஞா] [] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[] [நா] [நி] [நீ] [நு] [நூ] [நெ] [நே] [நை] [நொ] [நோ]
[] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ]
[யா] [] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]

பொதுவான மக்கட் பெண் பெயர் -பொதுவானவை

வைகறை - விடியல்.
வைகறை
வைகறைக்கதிர்
வைகறைக்கிளி
வைகறைக்குயில்
வைகறைச்சுடர்
வைகறைச்செல்வி
வைகறைத்தாமரை
வைகறைத்தென்றல்
வைகறைத்தேவி
வைகறைநங்கை
வைகறைப்பகல்
வைகறைப்பண்
வைகறைப்பரிதி
வைகறைப்பூ
வைகறைமகள்
வைகறைமங்கை
வைகறைமடந்தை
வைகறைமணி
வைகறைமயில்
வைகறைமலர்
வைகறைமுத்து
வைகறைமுரசு
வைகறையரசி
வைகறையழகி
வைகறையழகு
வைகறையாள்
வைகறையிசை
வைகறையின்பம்
வைகறையினி
வைகறையினியள்
வைகறையினியாள்
வைகறையெழில்
வைகறையெழிலி
வைகறையொலி
வைகறையொளி
வைகறைவடிவு
வைகறைவல்லி
வைகறைவாடை
வைகறைவாணி
வைகறைவாரி
வைகறைவானம்
வைகறைவெள்ளி

வைகை -ஓராறு.
வைகை
வைகைக்கயல்
வைகைக்கலம்
வைகைக்கழனி
வைகைக்கனி
வைகைக்கிளி
வைகைக்குமரி
வைகைக்குயில்
வைகைக்கூடல்
வைகைக்கொடி
வைகைக்கொழுந்து
வைகைக்கோதை
வைகைச்சந்தனம்
வைகைச்சாந்து
வைகைச்சுடர்
வைகைச்சுரபி
வைகைச்செல்வம்
வைகைச்செல்வி
வைகைச்சோலை
வைகைத்தங்கம்
வைகைத்தங்கை
வைகைத்தமிழ்
வைகைத்தலைவி
வைகைத்தாய்
வைகைத்திரு
வைகைத்துறை
வைகைத்தூயோள்
வைகைத்தென்றல்
வைகைத்தேவி
வைகைத்தேன்
வைகைத்தையல்
வைகைத்தோகை
வைகைநங்கை
வைகைநல்லாள்
வைகைநிலவு
வைகைநிலா
வைகைநெஞ்சள்
வைகைப்பிடி
வைகைப்பிணை
வைகைப்பிள்ளை
வைகைப்புகழ்
வைகைப்புணை
வைகைப்புனல்
வைகைப்பூவை
வைகைப்பெண்
வைகைப்பெண்டு
வைகைப்பொட்டு
வைகைப்பொழில்
வைகைப்பொன்னி
வைகைமகள்
வைகைமங்கை
வைகைமடந்தை
வைகைமணி
வைகைமதி
வைகைமயில்
வைகைமருதம்
வைகைமலர்
வைகைமாலை
வைகைமான்
வைகைமீன்
வைகைமுத்து
வைகைமுதல்வி
வைகைமுதலி
வைகைமுரசு
வைகைமுல்லை
வைகைமுறுவல்
வைகைமேழி
வைகையணி
வைகையம்மா
வைகையம்மை
வைகையமுது
வைகையரசி
வைகையரி
வைகையலை
வைகையழகி
வைகையழகு
வைகையன்னை
வைகையாள்
வைகையாறு
வைகையிசை
வைகையிறைவி
வைகையின்பம்
வைகையினி
வைகையினியள்
வைகையினியாள்
வைகையுரு
வைகைய10ராள்
வைகையெயினி
வைகையெழில்
வைகையெழிலி
வைகையேரி
வைகையொலி
வைகையொளி
வைகையோவியம்
வைகைவடிவு
வைகைவயல்
வைகைவல்லி
வைகைவள்ளி
வைகைவாணி
வைகைவாழி
வைகைவாளை
வைகைவிளக்கு
வைகைவேய்
வைகைவேரல்
வைகைவேரி
வைகைவேல்

அணி - அழகு.
அத்தி - ஒருவகை மரம்.
அம்மா - மேலானவள்.
அம்மாள் - மேலானவள்.
அம்மை - மேலானவள்.
அமுதம் - இன்னுணவு, சாவாமருந்து.
அமுது - இன்னுணவு, சாவாமருந்து.
அரசி - தலைவி, முதல்வி
அரசு - ஆள்பவள்.
அரண் - காப்பு.
அரி - வண்டு.
அருவி - நீரூற்று, மலையின்வீழ் புனல்.
அல்லி - ஒருவகை நீர்க்கொடி.
அலரி - ஒருவகை மலர்ச்செடி.
அலை - நீரலை, நீர்த்திரை.
அழகி - அழகானவள்.
அழகு - எழில்.
அறிவு - கல்வி, அறிவுணர்வு.
அன்பு - பற்று.
அன்னை - தாய்.


ஆத்தி - ஒருவகைமரம்.
ஆம்பல் - ஆம்பற்கொடி.
ஆவரசு - ஒருவகைச்செடி.
ஆழி - கடல்.
ஆளி - ஆள்பவள்.
ஆள் - பெண்பால் ஈறு.
ஆற்றல் - திறன்.


இசை - புகழ்.
இடை - மருங்கு, நடு.
இத்தி - ஒருவகைமரம்.
இமை - கண்ணிமை.
இழை - நுண்மை.
இழையாள் - அணிகலமுடையாள்.
இறைவி - தலைவி.
இன்பம் - மகிழ்ச்சி, இனிமை.
இனி - பெண்பாற் பின்னொட்டு.
இனியள் - இனியவள்.
இனியாள் - இனியவள்.


உடையாள் - உடையவள்.
உரு - வடிவம்.


ஊராள் - ஊரைச்சார்ந்தவள்.


எயினி - இடைக்குலப்பெண்.
எரி - நெருப்பு.
எழில் - அழகு.
எழிலி - அழகானவள்.
எழினி - திரை போன்றவள்.


ஏந்தி - மேலானவள், தலைமைப்பண்புடையவள்.
ஏரி - நீரேரி.


ஒலி - ஓசை.
ஒளி - வெளிச்சம்.


ஓதி - கூந்தல்.
ஓவியம் - சித்திரம்.


கடல் - பருமை.
கண்ணி - கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள், கண்ணையுடையவள்.
கண்ணு - கண்போன்றவள்,கண்ணில்நிற்பவள், கண்ணையுடையவள்.
கணை - அம்பு.
கதிர் - ஒளி, சுடர்.
கயம் - பெருமை, மென்மை, இளமை.
கயல் - மீன்.
கரை - எல்லை.
கலம் - கொள்கலம், அணிகலன், மரக்கலம், படைக்கலம்.
கலை - கல்வி.
கழல் - ஓரணிகலன்.
கழனி - வயல்.
கழி - கழிநிலம், மிகுதி.
கழை - மூங்கில்.
கனல் - நெருப்பு.
கனி - பழம்.

கா
கா - சோலை.
காஞ்சி - ஒருவகைமரம்.
காடு - கானம்.
காந்தள் - ஒருவகைமலர்.
கானல் - கடற்கரைப்புறச்சோலை.

கி
கிணை - தோற்கருவி.
கிள்ளை - கிளி.
கிளி - கிளி.

கு
குஞ்சு - இளையவள்.
குட்டி - இளையவள், சிறுபெண்.
குடிமகள் - குடிப்பிறப்புடையவள்.
குமரி - இளம்பெண்.
குயில் - ஒருபறவை.
குரல் - மிடற்றிசை.
குருவி - சிறுபறவை.
குவை - குவியல்.
குழல் - கூந்தல்.
குழலி - கூந்தலையுடையவள்.
குழை - காதணி.
குளத்தள் - குளத்தையுடையவள்.
குறிஞ்சி - குறிஞ்சிமலர், மலை.
குன்றம் - சிறுமலை.

கூ
கூடல் - ஓரூர்.
கூந்தல் - குழல்.
கொ
கொடி - கொடிபோன்றவள்.
கொடை - பேறு, வள்ளன்மை.
கொம்பு - ஒருவகை இசைக்கருவி.
கொழுந்து - சுடர், இளந்தளிர், இளமை, மென்மை.
கொன்றை - ஒருமரம்.

கோ
கோதை - மாலை.


சந்தனம் - மணங்கமழ்மரம், மணச்சாந்து.
சாந்து - மணச்சாந்து.
சாரல் - மலைச்சாரல்.

சி
சிட்டு - ஒருகுருவி.
சிலம்பு - காற்சிலம்பு.
சிவப்பி - சிவந்தநிறமுடையாள்.

சு
சுடர் - ஒளி.
சுரபி - சுரப்பவள்.
சுனை - நீர்ச்சுனை.

சூ
சூடி - அணிந்தவள்.

செ
செடி - செடி.
செம்மை - சீர்மை, சிறப்பு.
செருந்தி - ஒருவகைச்செடி.
செல்லம் - அருமை.
செல்வம் - திரு.
செல்வி - மகள்.
செவ்வந்தி - செவ்வந்திச்செடி.

சே
சேந்தி - சிவந்தவள்.
சேய் - மகள்.

சொ
சொல் - மொழி.

சோ
சோணை - ஓராறு.
சோலை - கா.

தகை - தகுதி, தகைமை.
தகையள் - தகுதியுடையவள், தகமையுடையவள்.
தங்கம் - தங்கமனையவள்.
தங்கை - பின்பிறந்தவள்.
தணல் - நெருப்பு.
தணிகை - ஓரிடம்.
தமிழ் - இனிமை, நீர்மை.
தலைவி - மேலானவள், முதல்வி.
தழல் - நெருப்பு.
தழை - தளிர்.

தா
தாமரை - ஒருமலர்.
தாய் - அன்னை, மேலானவள்.
தானை - படை.

தி
திங்கள் - மதி, நிலவு.
திரு - செல்வம்.
திருவருள் - அருள்.
திறல் - திறமை.

தீ
தீ - நெருப்பு.

து
துகிர் - பவளம்.
துடி - உடுக்கு.
துணை - நட்பு, உறவு.
துளசி - ஒருவகைச்செடி.
துறை - கலைப்பிரிவு, இடம்.

தூ
தூயவள் - தூய்மையானவள்.


தெ
தென்றல் - இளங்காற்று.

தே
தேவி - மேலானவள்.
தேன் - தேறல்.

தை
தையல் - பெண்மகள்.

தொ
தொடி - வளையல், வளையலணிந்தவள்.
தொடை - மாலை.

தோ
தோகை - மயில்.
தோழி - தோழமையுடையவள்.


நகை - அணிகலன், நகையுணர்வு.
நங்கை - பெண்ணிற்சிறந்தவள்.
நல்லள் - நல்லவள்.
நன்னி - நல்லவள்.

நா
நா - நாக்கு.
நாச்சி - தலைவி.
நாச்சியார் - தலைவி.

நி
நிலவு - திங்கள், திங்களொளி.
நிலா - மதி, மதியொளி.

நு
நுதல் - நெற்றி.


நெ
நெஞ்சள் - உள்ளமுடையவள்.
நெய்தல் - கழிநிலத்துமலர்.
நெல்லியள் - நெல்லிய10ராள்.
நெறி - நல்வழி.

நே
நேரியள் - நேர்வழிச்செல்பவள்.

நொ
நொச்சி - ஒருவகைமரம்.


பகல் - ஒளி.
பகன்றை - ஒருவகைச்செடி.
படை - தானை.
பண் - இசை.
பணை - பெருமை.
பரிதி - ஒளி.
பருத்தி - ஒருவகைச்செடி.
பழம் - கனி.

பா
பாடி - பாடுபவள், படைவீடு.
பாடினி - பாடுபவள்.
பாதிரி - ஒருமலர்.
பாலை - ஒருவகைப்பண்.

பி
பிச்சி - ஒருமலர்.
பிடி - பெண்யானை.
பிணை - பெண்மான்.
பிராட்டி - பெருமாட்டி.
பிள்ளை - பிள்ளை.
பிறை - பிறைமதி.


பு
புகழ் - இசை.
புணை - ஓடம்.
புதுமை - விருந்து, யாணர்.
புலமை - அறிவுடைமை.
புலி - வேங்கை.
புன்னை - ஒருமரம்.
புனல் - நீர்.

பூ
பூ - மலர்.
பூவை - நாகணவாய்.

பெ
பெண் - பெண்.
பெண்டு - பெண்டு.

பொ
பொட்டு -நெற்றியிலிடப்படுவது.
பொருநை - ஓராறு.
பொழில் - பூங்கா.
பொறை - பொறுமை.
பொறையள் -பொறுமையுடையவள்.
பொன் - பொன்போன்றவள்.
பொன்னி - பொன்போன்றவள்.

போ
போர் - அமர்.


மகள் - பெண்பிள்ளை.
மங்கை - பெண்.
மடந்தை - பெண்.
மணம் - நறுமணம்.
மணி - அழகு, மதிப்பு.
மதி - நிலவு.
மயில் - மயில் போன்றவள்.
மருதம் - மருதநிலம்.
மலர் - பூ.
மலை - கோடு, குவடு.
மலையள் - மலைபோன்றவள்.
மழை - விண்ணீர்.
மறை - மெய்ந்நெறி.
மனை - இல்லம்.

மா
மா - செல்வம், பெருமை, வலிமை, அழகு.
மாதேவி - பெருந்தேவி.
மாதுளை - ஒருவகைச்செடி.
மாமனி - பெருமணி.
மாமதி - பெரியமதி.
மாமயில் - பெரியமயில்.
மாரி - மழை.
மாலை - கோதை.
மான் - ஒருவிலங்கு.
மானம் - மானமுடையவள்.
மானி - மானமுடையவள்.

மி
மின்னல் - ஒளி.

மீ
மீன் - நீர்வாழ் உயிரினம்.

மு
முகில் - கார், மேகம்.
முகிலி - முகில்போன்றவள்.
முகை - மொட்டு.
முடி - தலைமை.
முத்து - ஒன்பான் மணியிலொன்று.
முதல்வி - முதன்மையானவள்.
முதலி - முதன்மையானவள்.
முரசு - போர்முரசு, வெற்றிமுரசு..
முல்லை - கொடிவகை.
முறுவல் - இளநகை.
மே
மேழி - கலப்பை.

மை
மைவிழி - மைதீட்டியவிழி.

மொ
மொட்டு - முகை, அரும்பு.
மொழி - சொல்.

மோ
மோனை - முதன்மை.

யா
யாழ் - ஒருவகை இசைக்கருவி.


வடிவு - உருவுடையவள்.
வயல் - கழனி.
வல்லாள் - ஆற்றலுடையவள்.
வல்லி - ஆற்றலுடையவள்.
வள்ளி - வண்மையுடையவள், கொடிபோன்றவள்.
வளை - வளையல்.

வா
வாகை - வெற்றி.
வாடை - காற்று.
வாணி - வல்லவள், வண்மையுடையவள்.
வாரி - கடல்.
வாழி - வாழ்த்து.
வாழை - ஒருவகைமரம்.
வாளை - ஒருவகைமீன்.
வானம் - விண்.

வி
வில் - போர்க்கருவிகளுளொன்று.
விழி - கண்.
விளக்கு - சுடர், ஒளி.
விளை - விளைவு.
விறல் - வெற்றி, வலிமை, வீரம்.
விறலி - பாடுபவள், ஆடுபவள்.

வீ
வீ - மலர்.
வீரை - வீரமுடையவள்.

வெ
வெட்சி - ஒருவகைப்பூ.
வெண்ணி - ஓரூர்.
வெள்ளி - வெண்பொன்.
வெற்றி - மேம்பாடு.

வே
வேங்கை - புலி.
வேம்பு - ஒருவகைமரம்.
வேய் - மூங்கில்.
வேரல் - மூங்கில்.
வேரி - தேன்.
வேல் -ஒருவகைப்போர்க்கருவி.

தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்-பொதுவானவை

அனைத்திலும் விடுபட்டவை


அகன் - உள்ளத்தன்
அஞ்சான் - அஞ்சாதவன், அச்சமற்றவன்
அஞ்சி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
அண்ணல் - தலைமைப்பண்புடைவன்
அத்தி - தமிழரசன் ஒருவனின் பெயர்
அப்பன் - மேலோன்
அம்பி - ஓடம்
அமுதன் - இனியவன், அமுதத்தையொத்தவன்
அமுது - இனிமை
அரசன் - வேந்தன்
அரசு - வேந்து
அரியன் - அருமையானவன், அரிபோன்றவன்
அருவி - நீரூற்று, மலையின்வீழ்புனல்
அலை - நீரலை, நீர்த்திரை
அழகன் - அழகானவன்
அழகு - எழில்
அறவன் - அறமுடையவன்
அறவோன் - அறமுடையவன்
அறிஞன் - அறிவுடையவன்
அறிவன் - அறிவுடையவன்
அறிவு - அறிவுடையவன்
அன் - ஆண்பால்ஈறு
அன்பன் - அன்புடையவன்
அன்பு - அன்புடைமை


ஆளன் - ஆள்பவன்
ஆளி - ஆள்பவன்
ஆற்றல் - திறனுடையவன்
ஆற்றலன் - திறலன், திறலோன்


இசை - புகழ், பண்
இசைஞன் - பாடகன்
இயன் - பின்னொட்டு
இன்பம் - உவகை, மகிழ்ச்;சி
இன்பன் - மகிழ்ச்சியுடையவன்
இனியன் - இனிமையானவன்


உடையான் - உடையவன்
உரவோன் - உறுதியுடையவன்
உருவன் - உருவமுடையவன்
உழவன் - உழுபவன்
உறைவோன் - வாழ்பவன் - தங்குபவன்


ஊரன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரான் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்
ஊரோன் - ஊரைச்சார்ந்தவன், ஊரையுடையவன்


எரி - நெருப்பு
எழிலன் - அழகன், எழுச்சியுடையவன்
எழிலான் - அழகன், எழுச்சியுடையவன்
எழிலோன் - அழகன், எழுச்சியுடையவன்
எழினி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன் பெயர்
எளியன் - எளிமையானவன்
எளியோன் - எளிமையானவன்


ஏந்தல் - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏந்தி - மேலோன், தலைமைப்பண்புடையவன், உயர்ந்தோன்
ஏரன் - உழவன், அழகன், எழுச்சியுடையவன்
ஏறு - ஆண்புலி, ஆணரிமா, காளை


ஐயன் - தலைமைப்பண்பினான், மேலோன்
ஐயா - தலைமைப்பண்பினான், மேலோன்


ஒலி - ஓசை
ஒலியன் - ஒலிப்பவன்
ஒளி - வெளிச்சம்
ஒளியன் - ஒளியையுடையவன்


ஓவியன் - சித்திரம்வரைபவன்

கடல் - பருமை, பெருமை, மிகுதி
கண்ணன் - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கண்ணு - கண்போன்றவன், கண்ணில்நிற்பவன்
கணை - அம்பு
கதிர் - பகலவன், ஞாயிறு, சுடர்,கூலக்கதிர்
கதிரவன் - பகலவன், ஞாயிறு, சுடர்
கதிரன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கதிரோன் - பகலவன், ஞாயிறு, கதிரவன், சுடர்
கரை - எல்லை
கலை - கல்;வி
கலைஞன் - கல்வியுடையவன்
கழியான் - கழிநிலத்தவன்
கனல் - நெருப்பு
கனி - பழம், இனிமை

கா
காடன் - காட்டிலுறைபவன், காடுடையான்
காரி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
காவலன் - காப்பவன்

கி
கிழான் - உரிமையுடையவன்
கிள்ளி - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்
கிளி - கிள்ளை

கீ
கீரன் - கழகப்புலவரொருவர் பெயர்

கு
குடிமகன் - குடிப்பிறப்புடையோன், குடிப்பிறந்தோன்
குமரன் - இளமையுடையவன், இளைஞன்
குரிசில் - உயர்ந்தோன், தலைவன், பெரியோன்
குளத்தன் - குளத்தையுடையவன்
குன்றன் - குன்றிலுறைபவன், குன்றையுடையவன், குன்றனையன், பெரியோன்

கூ
கூடலன் - கூடனிலத்தவன்
கூத்தன் - ஆடுபவன்

கே
கேழன் - நிறத்தன்
கேள்வன் - அன்பன், உறவினன், நண்பன்

கொ
கொடி - கொடி
கொடியோன் - கொடியையுடையவன்
கொழுந்து - சுடர், இளந்தளிர், இளமை, மென்மை
கொற்றவன் - வேந்தன், வெற்றியுடையவன், காவலன்
கொற்றன் - வெற்றியுடையவன்
கொன்றை - ஒருமரம்

கோ
கோ - வேந்தன்
கோடன் - மலையன்
கோதை - தமிழரசன் ஒருவன்பெயர், மாலை
கோமான் - அரசன், வேந்தன்
கோவன் - அரசன், வேந்தன்
கோன் - அரசன், வேந்தன்

சா
சந்தனம் - மணங்கமழ்மரம், மணச்சாந்து
சாந்து - சந்தனச்சாந்து
சாரல் - பக்கமலை
சான்றோன் - பெரியோன்
அன்பு, நாண், ஒப்புரவு,
கண்ணோட்டம் (அருள்), வாய்மை
ஆகிய ஐந்து குணங்களுடையவன்







சீ
சீரன் - சிறப்புடையவன்
சீராளன் - சிறப்புடையவன்
சீரோன் - சிறப்புடையவன்

சு
சுடர் - ஒளி
சுடரோன் - ஒளியுடையவன்
சுனை - நீர்ச்சுனை
சுனையான் - நீர்ச்சுனையையுடையவன்

சூ
சூடன் - அணிந்தவன்
சூடி - அணிந்தவன்

செ
செந்தில் - ஓரிடப்பெயர்
செம்மல் - தலைமைப்பண்புடையவன்
செல்வன் - செல்வமுடையவன்
செழியன் - பாண்டியவரசர் குலப்பெயர்
சென்னி - சோழவரசர் குலப்பெயர்

சே
சேந்தன் - செம்மையானவன், சிவந்தவன்
சேய் - குழந்தை, சிவந்தவன்
சேரலாதன் - சேரர்குலப் பேரரசன் ஒருவன்பெயர்
சேரன் - சேரமன்னர் குலப்பெயர்
சோலை - பொழில்
சோலையன் - சோலையையுடையவன்
சோழன் - சோழவரசர் குலப்பெயர்


தகை - தகுதியுடையவன், தகைமையுடையவன்
தகையன் - தகுதியுடையவன், தகைமையுடையவன்
தங்கம் - தங்கம்
தங்கன் - தங்கம் போன்றவன், தங்கத்தையுடையவன்
தணலன் - நெருப்னையவன்
தணிகையன் - தணிகை என்னும் இடத்தைச்சேர்ந்தவன்
தம்பி - பின்பிறந்தவன், இளையவன்
தமிழ் - இனிமை, நீர்மை
தமிழன் - தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவன்
தலைவன் - முதன்மையானவன், முதல்வன்
தழலன் - நெருப்பனையன்
தழலோன் - நெருப்பனையன்
தனையன் - மகன்

தா
தாரான் - மாலையணிந்தவன்
தாரோன் - மாலையணிந்தவன்
தாளன் - முயற்சியுடையவன்
தானையன் - படையுடையவன்


தி
திண்ணன் - உறுதியுடையவன்
திருவருள் - அருளுடையவன்
திருவன் - செல்வமுடையவன்
திறத்தன் - திறமையுடையவன், தன்மையுடையவன்
திறல் - திறமையுடையவன்
திறலோன் - திறமையுடையவன், தன்மையுடையவன்

தீ
தீ - நெருப்பு

து
துணை - உதவி
துணைவன் - உதவுபவன், நட்பினன், துணைநிற்பவன்
துரை - மேலானவன்
துறை - துறைசார்ந்தவன்
துறைவன் - கடனாடன், நெய்தல்; நிலத்தவன், துறைசார்ந்தவன்

தூ
தூயவன் - தூய்மையானவன், பண்புடையோன்
தூயன் - தூய்மையானவன், பண்புடையோன்
தூயோன் - தூய்மையானவன், பண்புடையோன்

தெ
தெய்வம் - மேலோன்
தென்றல் - இளங்காற்று
தென்னவன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர்
தென்னன் - தென்னாட்டவன், பாண்டியர் பெயர்

தே
தேவன் - மேலோன்
தேறல் - தேன்
தேன் - இனியவன், தேனனையவன்

தொ
தொடை - மாலை

தோ
தோணி - ஓடம்
தோழன் - தோழமையுடையவன், துணைவன்
தோன்றல் - தலைவன், மேலோன்


நம்பி - ஆடவருட்சிறந்தவன்
நல்லன் - நல்லவன்
நல்லோன் - நல்லவன்
நன்னன் - தமிழ்ச்சிற்றரசன் ஒருவன் பெயர், நன்மையுடையவன்

நா
நாகன் - தமிழர் பண்டைக்குலப்பெயர்
நாடன் - நாட்டையுடையவன,; நாட்டைச்சார்ந்தவன்
நாவன் - நாவில் வல்லவன், சொல்வன்மையுடையவன்

நி
நிலவன் - நிலவுபோன்றவன்
நிலவு - நிலவுபோன்றவன்

நெ
நெஞ்சன் - உள்ளமுடையவன்
நெடியோன் - உயர்ந்தவன், பெரியோன்
நெறியன் - நல்வழிச்செல்வோன்

நே
நேயன் - அன்பன்
நேரியன் - நேர்மையானவன்


பகலவன் - ஒளியுடையவன், ஞாயிறு
பகலோன் - ஒளியுடையவன், ஞாயிறு
பரிதி - ஒளியுடையவன், ஞாயிறு

பா
பா - பாட்டு
பாடி - பாடுபவன்
பாண்டியன் - முதற்றமிழரசர் குலப்பெயர்
பாரி - தமிழ்க்குறுனிலமன்னன்பெயர்(வள்ளல்)
பாவலன் - பாவில்வல்லவன்

பி
பித்தன் - ஊன்றிய உணர்வுடையவன்
பிள்ளை - பிள்ளை
பிறை - பிறைமதி

பு
புகழ் - மேன்மை
புகழன் - புகழுடையவன்
புகழோன் - புகழுடையவன்
புதியவன் - புதுமையானவன்
புரவலன் - காவலன், அரசன்
புலவன் - புலமையுடையவன்

பூ
பூவன் - மலர்போன்றவன்

பெ
பெரியன் - பெருமையுடையவன், உயர்ந்;தோன், சான்றோன்.

பே
பேகன் - தமிழ்க்குறுநிலமன்னன் ஒருவன்பெயர்.

பொ
பொருநன் - போர்செய்பவன், ஒப்பானவன்
பொருப்பன் - மலைநாடன், மலைபோன்றவன்.
பொழில் - சோலை
பொழிலன் - சோலையையுடையவன்
பொறை - பொறுமையுடையவன், சேரர்குலப்பெயர்
பொறையன் - பொறுமையுடையவன்
பொன்னன் - பொன்போன்றவன், பொன்னையுடையவன்

போ
போர் - அமர்
போரோன் - போர்செய்பவன், போர்க்குணமுடையவன்


மகன் - ஆண்மகவு, ஆடவன்
மணி - மதிப்புடையவன், அழகுடையவன்
மதி - அறிவு, திங்கள், நிலவு
மருகன் - மரபினன், மருமகன்
மருதன் - மருதநிலத்தவன், வயலூரான்
மல்லன் - வீரன், போர்வலியன்
மலை - உறுதி, பெருமை
மலையன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மலையோன் - உறுதியுடையவன், மலையையுடையவன், மலைநாடன்
மழவன் - இளமையானவன்
மள்ளன் - வலிமையுடையவன், இளைஞன், படைவீரன்
மறவன் - வீரன்
மன்னன் - அரசன்

மா
மா - செல்வம், பெருமை, வலி, அழகு
மாண்பன் - மாட்சிமையுடையவன்
மார்பன் - மார்பையுடையவன்
மாறன் - பாண்டியமன்னர் குலப்பெயர்
மான் - ஆண்பால் ஈறு
மானன் - மானமுடையவன்
மி
மின்னல் - ஒளி

மு
முகன் - முகத்தையுடையவன்
முகிலன் - முகில்போன்றவன்
முடி - தலைமை
முத்தன் - முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முத்து - முத்துப்போன்றவன், முத்தையுடையவன்
முதல்வன் - தலைவன், முன்னவன்
முரசு - போர்முரசனையர், வெற்றிமுரசனையர்
முருகன் - அழகன்
முருகு - இளமை, அழகு
முறுவல் - நகையுணர்வுடையவன்
முறையோன் - நெறியுடையோன்
முனைவன் - முன்னவன், தலைவன், முதல்வன்

மெ
மெய்யன் வழுதி
மெய்யன் - உண்மையுடையவன்

மே
மேழி - கலப்பை (உழுபவன்)

மை
மைந்தன் - வீரமுள்ளவன், மகன், இளையவன்

மொ
மொழி - மொழி

மௌ
மௌவல் - முல்லை

யா
யாழோன் - யாழையுடையவன்


வடிவேல் - கூர்வேல்
வண்ணன் - அழகன்
வரம்;பன் - எல்லையானவன்
வல்லவன் - ஆற்றலுடையோன்
வல்லோன் - ஆற்றலுடையோன்
வலவன் - ஆற்றலுடையோன்
வழுதி - பாண்டியர் குலப்பெயர்
வள்ளல் - வரையாது வழங்குபவன்
வளத்தன் - வளமுடையவன்
வளவன் - வளமுடையவன்

வா
வாகை - வெற்றி, வெற்றிமாலை
வாணன் - ஆற்றலுடையவன்
வாள் - வாளனையவன்

வி
வில் - வில்லனையவன்
வில்லவன் - வில்லனையவன்
வில்லோன் - வில்லனையவன், வில்லையுடையவன்
விழியன் - கண்ணழகுள்ளவன், கண்ணுடையவன்
விளம்பி - சொல்லுபவன்
விறல் - வீரம், வெற்றி
விறலன் - வீரன், வெற்றியன்.
விறலோன் - வீரன், வெற்றியன்

வீ
வீரன் - வீரமுள்ளவன், மறமுடையோன்

வெ
வெண்ணி - ஓரூர்
வெற்பன் - மலைநிகர்த்தவன், மலையுடையவன்
வெற்றி - வெற்றியடைதல்
வெற்றியன் - வெற்றியுடையன்
வென்றி - வெற்றியுடையன்
வென்றியன் - வெற்றியுடையன்

வே
வேங்கை - புலி
வேந்தன் - காவலன், அரசன்
வேல் - கூர்ங்கருவி
வேலன் - வேலையுடையவன்
வேலவன் - வேலையுடையவன்
வேலோன் - வேலையுடையவன்
வேள் - விரும்பப்படுபவன்
வேளிர் - தமிழ்க்குறுநிலமன்னர்; குலப்பெயர்
(சேரர்)